பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலையில் வீழ்ச்சி!

பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலையை 10% குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சில் இன்று (27.07) இடம்பெற்ற கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை காலணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் உற்பத்தியாளர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு தங்களால் இயன்ற நன்மைகளை வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply