அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று (27.07) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பொரள்ள பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது காலம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமையினால், நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் பின்னர், வசந்த முதலிகே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.