உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கோதுமை ஏற்மதி தடைப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச ரீதியில் கோதுமை மாவிற்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இதன்நிமித்தம் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையிலும் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.