மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்கள் வேகமாகவே வீழ்த்தப்பட்டன. பின் வரிசை விக்கெட்களை குல்தீப் யாதவ 3 ஓவர்களில் பதம் பார்த்தார். 6 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ஷாய் ஹோப் 43 ஓட்டங்களையும், அலிக் ஏதன்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களை கைபப்டரிக் கொடடுத்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இஷன் கிஷன் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சூர்யகுமார் யாதவ் 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ரோஹித் ஷர்மா ஏழாமிலக்கத்தில் துடுப்பாடினார். விராட் கோலி துடுப்பாடவில்லை. புதிய வீரர்கள் சோபித்தமை காணாது என்று கூறக்கூடிய நிலையே இந்திய அணியில் காணப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் குடகேஷ் மோட்டி 2 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.