அருணாச்சலப் பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (28.07) பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில், 4.0 அளவில் பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த 22 ஆம் திகதியும் தவாங்கில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக அருணாச்சலப்பிரதேசத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.