இந்திய முட்டைகளால் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்!

இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

இணைய செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியதாலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். 

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சில ஏற்கனவே பழுதடைந்த நிலையில், இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், காலாவதியாகும் திகதி அழிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், இதன் மூலம் பறவைக்காய்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply