நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு?

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தென்னை பயிர் செய்கைக்கு தேவையான உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட  தென்னை ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ​​உரம் இல்லாததால் தென்னை மரங்களின் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், இனி உரமிடப்பட்டாலும், அறுவடையை  பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply