தமிழ் மக்கள் கோரும் தீர்வை ஒருபோதும் வழங்க முடியாது!

தமிழ் மக்கள் கோரும் தனிநாட்டு தீர்வையோ, அல்லது சமஷ்டி தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நன்மை கருதியே செயற்படுகின்றார். அவருடன் ஒன்றித்துப் பயணித்து அரசியல் தீர்வைக் காண்பதற்குத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முயலவேண்டும்  என வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் தலைவர்கள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதாகவும், சாத்தியமில்லாத கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிரும் வகையிலான தீர்வே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான பிரச்சினைகளுக்கான தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply