பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும் அல்லது நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இலங்கையில் சந்தையை அவதானிக்கும் போது இது முறையாக மேற்கொள்ளப்படாததால் பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் நுகர்வோர் அதிகாரசபை இந்த நாட்களில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக அமுல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கோதுமை மா பொதிகளின் விலை குறிப்பிடப்படாதது தொடர்பில் நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனங்களான Prima மற்றும் Serendib ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவு தேவையான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply