தம்புள்ள – காலி போட்டி சுப்பர் ஓவரில் நிறைவு.
கோல் டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளின் முதற் போட்டி சுப்பர் ஓவரில் நிறைவடைந்தது. இதில் அணி தம்புள்ள ஓரா அணி வெற்றி பெற்றது.
தம்புள்ள அணி சுப்பர் ஓவரில் 01 விக்கெட்டை இழந்து 09 ஓட்டங்களை பெற்றது. கஸூன் ரஜித சிறப்பாக பந்துவீசினார். தம்புள்ள அணி சார்பாக பினுர பெர்னாண்டோ பந்து வீசியிருந்தார். 02 பந்துகளில் காலி அணி வெற்றி பெற்றது.
181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய காலி அணியின் ஆரம்ப விக்கெட்கள் அடுத்தடுத்து பதம் பார்க்கப்பட்டன. தடுமாறிய அணியை தனஞ்சய டி சில்வா, குஷல் பெரேரா ஆகியோர் இணைந்து தூக்கி நிறுத்தினர். 76 ஓட்டங்கள் இணைப்பட்டாமாக பெறப்பட்ட நிலையில் தனது முதல் ஓவரிலேயே தஸூன் சாணக்க ஆட்டமிழக்க செய்தார். மத்திய வரிசையில் மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து இழந்த காலி அணி மீண்டும் தடுமாறியது. இறுதி வரையில் போராடிய நிலையில் அலெக்ஸ் ரோஸ் தனித்து நின்று போராடி போட்டியினை சமன் செய்தார்.
தம்புள்ள அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இறுக்கமாக பந்துவீசினார்கள். இருப்பினும் இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சமநிலைக்கு 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பிடி ஒன்று நழுவ விடப்பட்டமை சமநிலை முடிவுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
ஆரம்ப விக்கெட்டினை காலி வேகமாக இழந்த போதும், பானுக ராஜபக்ஷ, லசித் குரூஸ்புள்ளே ஆகியோரின் இணைப்பாட்டம் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக் கொடுத்தது. இருவரது ஆட்டமிழப்பின் பின்னர் தம்புள்ள அணி ஓட்டங்களை பெற தடுமாறியது. வெளிநாட்டு வீரர்கள் ஷகிப் அல் ஹசன், ரிம் செய்பேர்ட் ஆகியயோரும் பெரிதளவில் ஓட்டங்களை பெறவில்லை. தஸூன் சாணக்க இறுதி நேரத்தில் அடித்தாடி ஓட்டங்களை அதிகரித்தார். இறுதி ஓவரில் நிகழ்த்திய அதிரடி காரணமாக போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை தம்புள்ள அணி பெற்றுள்ளது.
பினுர பெர்னாண்டோ, செகன்வாஸ் தஹானி ஆகியோர் காலி அணி சிறப்பாக பந்துவீசினார்கள்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
அவிஷ்க பெர்னாண்டோ | Bowled | கசுன் ரஜித | 01 | 04 | 0 | 0 |
குசல் மென்டிஸ் | Bowled | விஷ்வ பெர்னாண்டோ | 01 | 03 | 0 | 0 |
தனஞ்சய டி சில்வா | Bowled | தசுன் ஷானக | 43 | 31 | 5 | 1 |
குசல் பெரேரா | பிடி -டிம் செய்பேர்ட் | தசுன் ஷானக | 40 | 25 | 4 | 2 |
சதீர சமரவிக்ரம | பிடி -டிம் செய்பேர்ட் | ஷகிப் அல் ஹசன் | 13 | 09 | 0 | 1 |
அலெக்ஸ் ரோஸ் | 39 | 28 | 3 | 1 | ||
ஹெய்டன் கெர் | பிடி – ரப்ரைஸ் ஷம்சி | தசுன் ஷானக | 20 | 10 | 2 | 1 |
பினுர பெர்னாண்டோ | 02 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 180 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
கசுன் ரஜித | 04 | 00 | 35 | 02 |
விஷ்வ பெர்னாண்டோ | 02 | 00 | 20 | 01 |
ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 25 | 01 |
லசித் குரூஸ்புல்லே | 01 | 00 | 20 | 00 |
ரப்ரைஸ் ஷம்சி | 04 | 00 | 38 | 00 |
தசுன் ஷானக | 04 | 00 | 27 | 03 |
சீக்குகே பிரசன்ன | 01 | 00 | 11 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஷெவோன் டானியல் | L.B.W | பினுர பெர்னாண்டோ | 33 | 26 | 2 | 2 |
லசித் குரூஸ்புல்லே | Bowled | ஷகன்வாஸ் தஹானி | 03 | 05 | 0 | 0 |
பானுக ராஜபக்ச | பிடி-ஷகன்வாஸ் தஹானி | தனஞ்சய டி சில்வா | 48 | 34 | 5 | 2 |
டிம் செய்பேர்ட் | Run Out | 14 | 17 | 0 | 0 | |
ஷகிப் அல் ஹசன் | Bowled | ஷகன்வாஸ் தஹானி | 23 | 14 | 1 | 2 |
தசுன் ஷானக | 42 | 21 | 2 | 4 | ||
லஹிரு சமரகோன் | 07 | 04 | 1 | 0 | ||
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 180 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பினுர பெர்னாண்டோ | 04 | 00 | 32 | 01 |
ஷகன்வாஸ் தஹானி | 04 | 00 | 37 | 02 |
தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 38 | 01 |
ஹெய்டன் கெர் | 03 | 00 | 35 | 00 |
ரவிந்து பெர்னாண்டோ | 01 | 00 | 12 | 00 |
பிரவீன் ஜெயவிக்ரம | 04 | 00 | 25 | 00 |
அணி விபரம்
தம்புள்ளை ஓரா : குசல் மென்டிஸ் (wk & c), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், ஹெய்டன் கெர், பினுர பெர்னாண்டோ, ஷகன்வாஸ் தஹானி, பிரவீன் ஜெயவிக்ரம, ரவிந்து பெர்னாண்டோ
கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், சீக்குகே பிரசன்ன, விஷ்வ பெர்னாண்டோ, தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித