தம்புள்ள ஓரா மற்றும் பி.லவ் கண்டி அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடைபெற்று வரும், LPL கிரிக்கெட் போட்டியின் இன்றைய (04.08) முதற்போட்டியில் தம்புள்ள அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் தனஞ்சயடி சில்வா, 61 ஓட்டங்களையும், அவிஸ்டோ பெர்ணான்டோ 32 ஓட்டங்களையும், அலெக்ஸ் ரேன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில், கண்டி அணி சார்பாக முஜிபுர் ரஹ்மான், இசுரு உதான ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த ஓட்ட எண்ணிக்கையானது தம்புளை அணி வெற்றிப்பெருவதற்கு போதுமானது அல்ல எனக் கருதப்படுகிறது.
கண்டி அணியின் சிறந்த பந்துவீச்சு தம்புள அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை இழக்க செய்ததோடு, ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தியமையால்,கண்டி அணி வெற்றிபெற வாய்ப்பாக அமைந்தது.