கிளிநொச்சி மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று(04.08) மு.ப 11.00மணிக்கு இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரன் அவர்கள் மாவட்டத்தின் நிதி விடயம் சம்பந்தமாக விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் Key Performance Indicator(KPI) போட்டியில் தொடர்ச்சியாக பங்குபற்றி வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் புள்ளிகள் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் Key Performance Indicator(KPI) போட்டியில் வெற்றிகொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள், விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், கணக்குக் கிளை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply