யாழ் அணி அபார பந்துவீச்சு!

Jaffna கிங்ஸ் மற்றும் காலி டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில், கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் LPL தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, 20 ஓவரில் 9 விக்கட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப இணைப்பாட்டம் வேகமாகவும் சிறப்பாகவும் இருந்த போதும், முதல் விக்கட் இழப்பினை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்த்தப்பட காலி அணி தடுமாறிப்போனது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் 30 ஓட்டங்களையும், சிவன் டானியல் 25 ஓட்டங்களையும், லசித் குருசேபுள்ளெ 19 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ் அணி சார்பாக துணித் வெல்லாலகே, மிக அபாரமாக பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இது அவரது சிறந்த 20/20 பந்து வீச்சாகும், நன்றே பேகர் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஓட்ட இலக்கை யாழ் அணி இலகுவாக பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தொடரில் காலி அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, யாழ் அணி ஒரு வெற்றியினையும் ஒரு தோல்வியினையும் பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply