ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புதிய திருப்பம்!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு “மோடி” என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

குஜராத் உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்த போதிலும், .உச்ச நீதிமன்றத்தில் இம்மனு மீதான விசாரணை இன்று (04.08) இடம்பெற்றது.

இதனையடுத்து, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply