உடவலவ நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் மட்டம் குறைந்துள்ளதாகவும் தற்போது 1.4 வீதமே இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வளவ மகாவலி பிரதேசத்தில் பன்னிரண்டாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கைகளுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நீர் அளவு ஒரு நாளைக்கு மாத்திரம் விவசாய நிலங்களுக்கு நீர் விடுவதற்கு போதுமானது என நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.