மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ​​மின் கட்டண திருத்தம் வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே 06 மாதங்களுக்கு ஒரு முறை இடம்பெறுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்வருடம் மின் கட்டண திருத்தம் இடம்பெறாது என பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply