ஜப்னா கிங்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாம் நாளின் இரண்டாவது போட்டியில் கண்டி அணி மிக அபாரமான வெற்றியினை பெற்றுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ் அணியினை 117 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் விளையாடிய நான்கு போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
118 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடிப்பாடிய கண்டி மெதுவான நிதானமான துடுப்பாட்டத்தை மேற்கொண்டது. இருப்பினும் சந்திமால் 31 ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய வனிந்து ஹசரங்க இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் நிலையை உருவாக்கினார். அத்தோடு அதிரடி நிகழ்த்தி அணிக்கு வெற்றியினையும் பெற்றுக் கொடுத்தார். பக்கார் ஷமானின் நிதானமான துடுப்பாட்டம் கண்டி அணிக்கு மேலும் கை கொடுத்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்து சிறப்பான பந்துவீச்சு மூலம் யாழ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தியது. அஞ்சலோ மத்தியூஸ் முதல் ஓவரிலேயே இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழகச்செய்து யாழ் அணியை தடுமாற வைத்தார். அதனை தொடர்ந்தும் சரியான இணைப்பாட்டங்களை உருவாக்க முடியாமல் யாழ் அணி தடுமாறியது. நுவான் பிரதீப் மத்திய வரிசை விக்கெட்களை பதம் பார்க்க யாழ் அணிக்கு ஓட்டம் பெறும் வாய்ப்புகளும் குறைந்து போனது. வனிந்து ஹசரங்க இறுக்கமாக பந்து வீசி விக்கெட்களையும் கைப்பற்றி மேலும் யாழ் அணியை தடுமாற வைத்தார்.
துடுப்பாட்டத்தில் டுனித் வெல்லாளகே இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடினர், இருப்பினும் அவரின் துடுப்பாட்ட இடம் மற்றும் இணைப்பாட்டங்கள் சரியாக அமையாமல் போக ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை. இள வயதிலும் அழுத்தங்களுக்கு மத்தியில் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் நுட்பமாக துடுப்பாடிய விதம் போற்றத்தக்கது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பகார் ஷமான் | பிடி – டேவிட் மில்லர் | 42 | 39 | 2 | 2 | |
| தினேஷ் சந்திமால் | Bowled | நன்றே பேர்கர் | 22 | 16 | 3 | 0 |
| வனிந்து ஹசரங்க | 52 | 22 | 5 | 3 | ||
| சஹான் ஆராச்சிகே | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 01 | |||||
| ஓவர் 13 | விக்கெட் 02 | மொத்தம் | 118 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| திஸர பெரேரா | 03 | 00 | 23 | 00 |
| மஹீஸ் தீக்ஷண | 04 | 00 | 35 | 00 |
| நுவான் துஷார | 02 | 00 | 12 | 00 |
| நன்றே பேர்கர் | 02 | 00 | 17 | 01 |
| விஜயகாந்த் வியாஸ்காந் | 01 | 00 | 13 | 00 |
| டுனித் வெல்லாளகே | 01 | 00 | 17 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – துஷ்மாந்த சமீர | அஞ்சலோ மத்யூஸ் | 00 | 05 | 0 | 0 |
| சரித் அஸலங்க | பிடி – தினேஷ் சந்திமால் | அஞ்சலோ மத்யூஸ் | 05 | 06 | 1 | 0 |
| தௌஹித் ரிதோய் | பிடி – துஷ்மாந்த சமீர | வனிந்து ஹசரங்க | 19 | 22 | 3 | 0 |
| டேவிட் மில்லர் | பிடி – | இசுரு உதான | 21 | 22 | 3 | 0 |
| பிரியாமல் பெரேரா | பிடி – வனிந்து ஹசரங்க | நுவான் பிரதீப் | 22 | 22 | 1 | 1 |
| திசர பெரேரா | பிடி – வனிந்து ஹசரங்க | நுவான் பிரதீப் | 02 | 03 | 0 | 0 |
| டுனித் வெல்லாளகே | 28 | 27 | 6 | 1 | ||
| விஜயகாந் வியாஸ்கந் | L.B.W | நுவான் பிரதீப் | 00 | 01 | 0 | 0 |
| மஹீஸ் தீக்ஷண | Bowled | வனிந்து ஹசரங்க | 00 | 04 | 0 | 0 |
| நுவான் துஷார | L.B.W | வனிந்து ஹசரங்க | 00 | 01 | 0 | 0 |
| நன்றே பேர்கர் | 06 | 07 | 1 | 0 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 09 | மொத்தம் | 117 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| அஞ்சலோ மத்யூஸ் | 02 | 00 | 08 | 02 |
| முஜீப் உர் ரஹ்மான் | 03 | 00 | 13 | 00 |
| துஷ்மாந்த சமீர | 04 | 00 | 23 | 00 |
| வனிந்து ஹசரங்க | 04 | 00 | 09 | 03 |
| இசுரு உதான | 02 | 00 | 17 | 01 |
| நுவான் பிரதீப் | 04 | 00 | 36 | 03 |