இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கலாம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply