அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயற்கை விடையத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது விவசாயிகளின் பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் என்ன எனவும், தண்ணீர் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இது குறித்து நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிப்போம் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.