மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்!

புதிய வகை கொரோனா திரிபுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவுறுத்தியுள்ளார்.

,இது குறித்து நேற்று (10.08) கருத்து வெளியிட்ட அவர், உலக சுகாதார நிறுவனம் தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பரவி வரும் EG.5 வகை கொரோன வைரஸ் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் வழக்குகள் மற்றும் இறப்புகளில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான மாறுபாடு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உலக சுகாதார நிறுவனம், COVID க்கான நிலையான பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிட்டது எனவும், தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்குமாறு   நாடுகளை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply