கண்டியில் இருந்து மாத்தளை வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த ரயில் சேவையில் ஈடுபடாது என இலங்கை ரயில்வே தலைமையகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபொல தெரிவித்துள்ளார்.
கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு காரணமாகவே இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.