உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் “பாபி” திரைப்படம் அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இதன்படி இந்த படத்தை அந்த நாடுகளில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், லெபனானிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
“சமூக நெறிமுறைகளை” பாதுகாப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக குவைத் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், படம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்று லெபனான் குறைக்கூறியுள்ளது. சில வாரங்களுக்கு முன் வெளியான இந்தப் படம் இதுவரை ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.