வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் தற்போது அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உங்கள் பகுதிக்குரிய கிராம அலுவலரிடம் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொதுமக்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து தமது பெயர் வாக்காளர் பதிவேட்டில் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும் என பொதுத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply