ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் AA சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று(19.08) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 20-20 கிரிக்கெட் போட்டியில் AA சுப்பர் கிங்ஸ் அணி 03 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் 08 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஆனந்தன் கஜன் 27 ஓட்டங்களையும், ஸ்ரீதரன் சாரங்கன் 24 ஓட்டங்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் AA சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக லோகேஸ்வரன் ஹரிஷ்குமார், அருணோதயம் அஞ்சயன், சுமித்ப்ரின் டயஸ் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய AA சுப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்ப விக்ட்களை ஜப்னா ஸ்டேலியன்ஸ் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய நிலையில் எட்டாமிலக்க துடுப்பாட்ட வீரர் ரூட் டானியல் அதிரடி நிகழ்த்தி 12 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று வெற்றியினை இலகுவாக்கினார். சூரியகுமார் அஜித் 23 ஓட்டங்களையும், விஜயரட்ணம் முருகா 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் பத்துவீச்சில் நிஷாந்தன் அஜய், அன்டன் செல்வதாஸ் சரன் ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய தொடரில் AA சுப்பர் கிங்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.