கண்டி அணி முதற் தடவையாக இறுதிப் போட்டியில்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது அணியாக பி-லவ் கண்டி அணி முதற் தடவையாக தெரிவாகியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணியை 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்கள் மற்றும் கூடுதலான விக்கெட்கள் என்ற பெறுதியோடு தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

கண்டி அணியின் ஆரம்ப விக்கட்கள் வேகமாக தளர்க்கப்பட அதிரடி நிகழ்த்தும் கண்டி சோர்ந்து போனது. மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக வனிந்து ஹஸரங்க, டினேஷ் சந்திமால் இணைந்து அணியின் துடுப்பாட்டத்தை ஸ்திர நிலைக்கு எடுத்து சென்றனர். ஒன்பதாவது ஓவரில் வனிந்துவுக்கு ஏற்பட்ட தசை பிடிப்பும் சிறிதளவு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் உபாதையோடு அதிரடி நிகழ்த்தி அணியின் ஓட்ட எண்ணைக்கையினை உயர்த்தினார். இருவரும் இணைந்து 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் வனிந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அஞ்சலோ மத்தியூசும் சிறப்பாக துடுப்பாட கண்டி அணி போராடக் கூடிய இலக்கை தொட்டுள்ளது. இருப்பினும் இதனை வெற்றி பெறக்கூடிய இலக்காக எடுத்துக்கொள்ள முடியாது.

பந்துவீச்சில் லஹிரு குமார சிறந்த ஆரம்பம் ஒன்றை வழங்கினார். சொனால் டினுஷ இணைப்பாட்டங்களை முறியடித்துக் கொடுத்தார்.

148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய காலி அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும் அது முறியடிக்கப்பட அடுத்ததடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட தடுமாறிப் போனது. பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா அபாரமாக பந்துவீசினார். ஓட்டங்களை அதிகமாக வழங்காத அதேவேளை விக்கெட்களையும் கைப்பற்றினார்.

நாளைய தினம் இரவு 7.30 இற்கு தம்புள்ளை ஓரா, பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் முதற் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லிட்டோன் டாஸ்Bowledசத்துரங்க டி சில்வா  251940
லசித் குரூஸ்புல்லேபிடி- லஹிரு மதுசங்கசத்துரங்க டி சில்வா  141310
சொஹான் டி லிவேராபிடி- மொஹமட் ஹஸ்னைன்முஜீப் உர் ரஹ்மான்010400
ஷகிப் அல் ஹசன்பிடி- மொஹமட் ஹரிஸ்சஹான் ஆராச்சிகே171520
சொனால் டினுஷபிடி- தினேஷ் சந்திமால்மொஹமட் ஹஸ்னைன்283201
தசுன் ஷானகபிடி- தினேஷ் சந்திமால்வனிந்து ஹசரங்க040800
நஜிபுல்லா ஷர்டான்பிடி- முஜீப் உர் ரஹ்மான்மொஹமட் ஹஸ்னைன்010500
சீக்குகே பிரசன்னபிடி- அஞ்சலோ மத்யூஸ்வனிந்து ஹசரங்க010200
கசுன் ராஜித  101511
லஹிரு குமார  100801
      
உதிரிகள்  12   
ஓவர்  16.4விக்கெட்  10மொத்தம்114   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
அஞ்சலோ மத்யூஸ்03003100
முஜீப் உர் ரஹ்மான்03002901
வனிந்து ஹசரங்க04002102
சத்துரங்க டி சில்வா  04001602
சஹான் ஆராச்சிகே02001001
மொஹமட் ஹஸ்னைன்03000802
லஹிரு மதுசங்க01000500

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மொஹமட் ஹரிஸ்பிடி – கசுன் ராஜிதலஹிரு குமார070710
தனுக்க டபாரேபிடி – நஜிபுல்லா ஷர்டான்லஹிரு குமார050810
தினேஷ் சந்திமால்பிடி – லசித் குரூஸ்புல்லேசொனால் டினுஷ251731
சஹான் ஆராச்சிகேSt. சொஹான் டி லிவேராஷகிப் அல் ஹசன்000400
வனிந்து ஹசரங்கபிடி – கசுன் ராஜிதசொனால் டினுஷ483034
அஞ்சலோ மத்யூஸ்Run Out 241721
ஆஷிப் அலிபிடி – தசுன் ஷானககசுன் ராஜித101101
சத்துரங்க டி சில்வா  150611
லஹிரு மதுசங்க  010100
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்157   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கசுன் ராஜித04002701
லஹிரு குமார04002102
ஷகிப் அல் ஹசன்04002401
தப்ரைஸ் ஷம்சி02002200
சீக்குகே பிரசன்ன02001900
தசுன் ஷானக01001200
சொனால் டினுஷ03003202

Social Share

Leave a Reply