மதுரை – கொழும்பு விமான சேவைகள் ஆரம்பம்!

மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, SG-003 என்ற முதலாவது விமானம் இன்று (20.08) 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் பிற்பகல் 02.2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதேபோல் இன்று மதியம் 2.50 மணியளவில் 50 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மதுரை – கொழும்புக்கு இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply