எல்ல பாலத்தை சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர்  அஷேந்திர திஸாநாயக்க, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள்  சுவர்களில் பல்வேறு ஓவியங்களையும் கடிதங்களையும் எழுதி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“எல்லா ஒன்பது வளைவுப் பாலத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர் எனவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் மிகவும் கட்டுக்கடங்காமல் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.

சில இடங்களில் அநாகரீகமான சித்திரங்கள் வரையப்பட்டதாகவும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு அதிகம் கேடு விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் குறிப்பாக இந்த வரலாற்று இடத்தை பாதுகாக்க பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply