யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் (15.08) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளான கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம் மற்றும் மேசைப்பந்தாட்டம் என நான்கு வகையான போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்று முடிவடைந்திருந்தன.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிளைத் தலைவர்கள், விளையாட்டுத்துறை பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.