காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வகையான நோய் அறிகுறிகளைகொண்ட மேலும் மூவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரணத்திற்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நிபுணர்கள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.