மின் துண்டிப்பு குறித்து வெளியான அறிவிப்பு!

நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தாததால் நாடு முழுவதும் உள்ள சுமார் 5,000 மின் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் மின் விநியோகத்தை திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளனர், ஆனால் கிட்டத்தட்ட 10% மக்கள் இன்னும் மின் இணைப்புகளை திரும்பப் பெறாமல் இருளில் இருப்பதாக மின்சார வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் செலுத்தப்படாத மின்சாரக் கட்டணம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மின்தடை செய்ய வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

Social Share

Leave a Reply