இரத்மலானையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

இரத்மலானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(21.08) இரவு இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்மலான – அரலிய நியாபா பகுதியைச் சேர்ந்த சின்ஹார அநுர தேசப்பிரிய என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த நபர் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply