நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் நிர்மாணிப்பு!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நாடு முழுவதிலும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும்,  மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்  மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல் மாத்தளை, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய கிராமங்களில் வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

Social Share

Leave a Reply