ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என எழுதுவதனையும், கூறுவதையும் கேட்டு தான் சலிப்படைந்துள்ளதாக ஜனசத்தி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சாப்டர் ட்விட்டர் மூலம் கருத்து கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மூவர் போட்டியிட்டார்கள் என்பதனை பலரும் மறந்துவிட்டார்கள் எனவும், அதில் இருவர் பரிதாபமாக தோற்றுப் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை கூறுவதானால் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ரசிகர் இல்லை எனவும், “அரசியலமைப்பு ரீதியில் அவர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டவர் எனவும், தேர்ந்தெடுக்கப்படாதவர் என அழைக்க முடியாது” என்ற உண்மை தொடர்பில் அக்கறை கொள்வதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.