வறட்சியின் சேதங்களை மதிப்பிட ட்ரோனை பயன்படுத்த திட்டம்!

வறண்ட காலநிலையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.  

இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதம் 31ஆம் திகதிக்குள் சேத மதிப்பீட்டை பூர்த்தி செய்து அறிக்கையை நிதியமைச்சிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  பண்டுக வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

இவ்வேளையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்பதற்காக விவசாயக் காப்புறுதிச் சபை அதிகாரிகள் தரை மட்டத்தில் இந்த சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீலங்கா எயார் விமானத்துடன் இணைந்து ஆளில்லா விமானங்களை அனுப்பவுள்ளதாகவும் வரும் 25ம் திகதி கட்டாயப்படுத்தி, அடுத்த சில நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் குறித்து துல்லியமான மதிப்பீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply