உலகக்கிண்ண செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் காணப்படும் மக்னஸ் கார்லஸ்சன் இந்தியாவின் தமிழக வீரர் ரமேஷ்பாபு பிரேக்கஞானந்தாவை வெற்றி பெற்று உலக சம்பியனாக மகுடம் சூடியுள்ளார்.
இந்த வெற்றி அவருக்கு இலகுவாக கிடைக்கவில்லை. 18 வயது தமிழ் இளைஞனான ப்ரக்ஞானந்தா கடும் சவாலை கார்லஸ்சனுக்கு வழங்கினார். முதல் இரு போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்தன.
கடந்த 22 ஆம் திகதி முதற் போட்டியும், நேற்று இரண்டாம் போட்டியும் நடைபெற்றன. இரு போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்த நிலையில் இன்று டை பிரேக்கர் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு டை பிரேக்கர் போட்டிகளிலும் ப்ரக்ஞானந்தா கடும் சவாலை வழங்கிய போதும் வெற்றி பெற முடியவில்லை.
தரப்படுத்தலில் 31 ஆம் இடத்தில் காணப்படும் தமிழக வீரர் ப்ரக்ஞானந்தாவை வெற்றி பெற்று முதற் தடவையாக நோர்வே நாட்டை சேர்ந்த 32 வயதான மக்னஸ் கார்லஸ்சன் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா சார்பாக உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றிய வயது குறைந்த வீரரும், உலக்கிண்ணத்தில் பங்குபற்றிய மூன்றாவது வயது குறைந்த வீரரும் என்ற முக்கிய மைற்கற்களை அவர் தொட்டிருந்தார்.