அடகில் உள்ள 10 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் பெறுமதியான நகைகள்!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலர் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பதினைந்து மாவட்டங்களை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக 200,000க்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

பயிர் சேதம் அறுபதாயிரம் ஏக்கரைத் தாண்டியுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த வருடம் 68,000 கோடிக்கும் அதிகமான பெறுமதியான நகைகளை வங்கிகள் மற்றும் அடகுக் கடைகளில் அடகு வைத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply