மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (26.08) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் (27.08) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.