எல்ல பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்!

எல்ல, கொடுவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (30.08) அதிகாலை 01.30 மணியளவில் எல்ல பொலிஸ் நிலையத்தின் ஐந்து உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புக்கு சென்ற வேளையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் 38 மற்றும் 29 வயதுடைய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எனவும், காயமடைந்த அதிகாரிகள் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்ற நேவி அசங்க அல்லது அசங்க மதுர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்படும் போது, ​​சந்தேக நபரிடம் கூரிய கத்தி, கைக்குண்டு மற்றும் கையால் தாக்க பயன்படுத்தப்படும் நக்கிள் எனப்படும் ஆயுதம் ஆகியன இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply