ஆசிய கிண்ண தொடர் 2023 இன்று(30.08) பாகிஸ்தானில் ஆரம்பித்துள்ளது . ஆசிய கிண்ண தொடரை நடாத்தும் பாகிஸ்தான் மற்றும் முதற் தடவை ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் நேபாளம் ஆகிய அணிகள் இன்றைய முதற் போட்டியில் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து சிறந்த ஓட்ட இலக்கை அடைந்துள்ளது. 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்ப விக்கெட்கள் இரண்டும் வேகமாக இழந்த போதும், பாபர் அஸாம் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடியாக துடுப்பாடி தனது 19 ஆவது சதத்தை பெற்றுக் கொண்டார். இப்திகார் அஹமட்டின் அதிரடி பாகிஸ்தான் அணியின் ஓட்ட உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அவர் தனது முதற் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார்.
25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அஸாம், முஹமட் ரிஷ்வான் ஆகியோர் 86 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அஹா சல்மான் வேகமாக ஆட்டமிழக்க ஜோடி சேர்ந்த அஸாம், இப்திகார் அஹமட் ஜோடி அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். இருவரும் 214 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஓட்ட எண்ணைக்கையினை நேபாளம் துரத்தியடிப்பது இலகுவாக அமையாது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பகார் ஷமான் | பிடி – ஆசிப் ஷெய்க் | கரண் KC | 14 | 20 | 3 | 0 |
இமாம் உல் ஹக் | Run Out | 05 | 14 | 1 | 0 | |
பாபர் அசாம் | பிடி – ஜோரா | சொம்பல் கமி | 151 | 131 | 14 | 4 |
முகமட் ரிஸ்வான் | Run Out | 44 | 50 | 6 | 0 | |
அகா சல்மான் | பிடி – குஷல் பூர்டெல் | சந்தீப் லமிச்சானி | 05 | 14 | 0 | 0 |
இப்திகார் அகமட் | 109 | 71 | 11 | 4 | ||
ஷதாப் கான் | Bowled | சொம்பல் கமி | 04 | 02 | 1 | 0 |
உதிரிகள் | 09 | |||||
ஓவர் 50 | விக்கெட் 06 | மொத்தம் | 342 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
சொம்பல் கமி | 10 | 01 | 85 | 02 |
கரண் KC | 09 | 00 | 54 | 01 |
குல்ஷன் ஜா | 04 | 00 | 35 | 00 |
லலித் ராஜ்பான்ஷி | 10 | 00 | 48 | 00 |
சந்தீப் லமிச்சானி | 10 | 00 | 69 | 01 |
டிபென்ற சிங் ஐரீ | 06 | 00 | 40 | 00 |
குஷல் பூர்டெல் | 01 | 00 | 10 | 00 |
அணி விபரம்
பாகிஸ்தான் நேபாளம்
பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா
குஷால் பூர்டெல், ஆஷிப் ஷெய்க், ரோஹித் பௌடல், ஆரிப் ஷெய்க், குஷால் மல்லா, டிபென்ற சிங் ஐரீ, குல்ஷன் ஜா, சொம்பல் கமி, கரண் KC, சந்தீப் லமிச்சானி , லலித் ராஜ்பான்ஷி