பாகிஸ்தானுக்கு இலகு வெற்றி

ஆசிய கிண்ண தொடர் 2023 இன்று(30.08) பாகிஸ்தானில் ஆரம்பித்தது . ஆசிய கிண்ண தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணி முதற் தடவை ஆசிய கிண்ண தொடரில் களமிறங்கிய நேபாளம் அணியை 238 ஓட்டங்களினால் இன்றைய முதற் போட்டியில் வெற்றி பெற்றது.

343 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய நேபாளம் அணி 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. முன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் 59 ஓட்டங்களை வழங்கியது. அந்த இணைப்பாட்டம் முறியடிக்கப்பட நேபாளம் அணி வேகமாக விக்கெட்களை இழந்து.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சகலருமே சிறப்பாக பந்துவீசினார்கள். ஷதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து சிறந்த ஓட்ட இலக்கை அடைந்தது. 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்ப விக்கெட்கள் இரண்டும் வேகமாக இழந்த போதும், பாபர் அஸாம் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடியாக துடுப்பாடி தனது 19 ஆவது சதத்தை பெற்றுக் கொண்டார். இப்திகார் அஹமட்டின் அதிரடி பாகிஸ்தான் அணியின் ஓட்ட உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அவர் தனது முதற் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார்.

25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அஸாம், முஹமட் ரிஷ்வான் ஆகியோர் 86 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அஹா சல்மான் வேகமாக ஆட்டமிழக்க ஜோடி சேர்ந்த அஸாம், இப்திகார் அஹமட் ஜோடி அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். இருவரும் 214 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இரு அணிகளும் இந்தியா அணியுடன், போட்டிகளில் மோதவுள்ளன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குஷால் பூர்டெல்பிடி – முகமட் ரிஸ்வான்ஷகீன் ஷா அப்ரிடி080420
ஆஷிப் ஷெய்க்பிடி – இப்திகார் அகமட்நசீம் ஷா050510
ரோஹித் பௌடல்L.B.Wஷகீன் ஷா அப்ரிடி000100
ஆரிப் ஷெய்க்Boweldஹரிஸ் ரவுப்263850
சொம்பல் கமிபிடி – முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவுஃப்284640
குல்ஷன் ஜாபிடி – பகார் ஷமான் 132301
டிபென்ற சிங் ஐரீBoweldமுகமட் நவாஸ்031100
குஷால் மல்லாபிடி – இப்திகார் அகமட்ஷதாப் கான்060401
சந்தீப் லமிச்சானிBoweldஷதாப் கான்000200
கரண் KC  070610
லலித் ராஜ்பான்ஷி L.B.Wஷதாப் கான்000200
உதிரிகள்  08   
ஓவர்  23.4விக்கெட்  10மொத்தம்104   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷகீன் ஷா அப்ரிடி05002702
நசீம் ஷா05001701
ஹரிஸ் ரவுஃப்05011602
ஷதாப் கான்6.4002704
முகமட் நவாஸ்02001301
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பகார் ஷமான்பிடி – ஆசிப் ஷெய்க்கரண் KC142030
இமாம் உல் ஹக்Run Out 051410
பாபர் அசாம்பிடி – ஜோராசொம்பல் கமி151131144
முகமட் ரிஸ்வான்Run Out 445060
அகா சல்மான்பிடி – குஷல் பூர்டெல்சந்தீப் லமிச்சானி051400
இப்திகார் அகமட்  10971114
ஷதாப் கான்Bowledசொம்பல் கமி040210
       
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  50விக்கெட்  06மொத்தம்342   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
சொம்பல் கமி10018502
கரண் KC09005401
குல்ஷன் ஜா04003500
லலித் ராஜ்பான்ஷி 10004800
சந்தீப் லமிச்சானி10006901
டிபென்ற சிங் ஐரீ06004000
குஷல் பூர்டெல்01001000

அணி விபரம்

பாகிஸ்தான் நேபாளம்
பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா

குஷால் பூர்டெல், ஆஷிப் ஷெய்க், ரோஹித் பௌடல், ஆரிப் ஷெய்க், குஷால் மல்லா, டிபென்ற சிங் ஐரீ, குல்ஷன் ஜா, சொம்பல் கமி, கரண் KC, சந்தீப் லமிச்சானி , லலித் ராஜ்பான்ஷி

Social Share

Leave a Reply