பிலிப்பைன்ஸில் துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கும் அமெரிக்கா!

பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு தீவு பகுதியில் ஒரு சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க அமெரிக்க இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த துறைமுகத்தை அமைப்பதற்காக தைவானில் இருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள படான்ஸ் தீவுகள் முன்மொழியப்பட்டுள்ளன.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தைவானுக்கான உதவிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம் சீனாவுடனான பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

பிலிப்பைன்ஸுடனான  நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்த ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த வொஷிங்டன்  தீவிரமாக முயற்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. 

இதற்கிடையே தைவானை தங்களுடன் இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வரும் சீனா, அங்கு போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி பதற்றங்களை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் போர் மூளலாம்  என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தீவில் அமெரிக்காவின் கடற்படை தளம்  அமைக்கப்படும் பட்சத்தில், தைவான் மீது சீனா போர் தொடுத்தால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் களமிறங்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

Social Share

Leave a Reply