இலங்கை அணியின் ஆசிய கிண்ண வாய்ப்புகள் மற்றும் இன்றைய போட்டி முன்னோட்ட வீடியோ
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
கண்டியிலும் மைதானத்தை அண்மித்த பகுதிகளிலும் மழை தூறல்கள் காலை முதல் பெய்து வருகின்றது. இருப்பினும் மைதானத்தில் மழை பெய்யவில்லை. LPL காலத்தில் இருந்தது போன்றல்லாமல் வெப்பம் குறைவடைந்து குளிர் காலநிலை காணப்படுகிறது.
அணி விபரம்
1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 11 சரித் அசலங்க
பங்களாதேஷ்
1 நைம் ஷேக், 2 ரன்ஷிட் ஹசன் ரமீம் , 3 ஷகிப் அல் ஹசன் (தலைவர்), 4 நஸ்முல் ஹொசைன் சன்டோ , 5 முஷ்பிகுர் ரஹீம், 6 தௌஹித் ரிதோய், 7 மெஹதி ஹசன் , 8 மெஹேதி ஹசன் மிர்ஸா, 9 ஷொரிபுல் இஸ்லாம் 10 ரஸ்கின் அஹமட், 11 முஸ்டபைசூர் ரஹ்மான்