தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 07 குழந்தைகள் உள்ளடங்கியுள்ளதுடன், 52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறிள்ளார்.