ரஷ்யாவின் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நிலைநிறுத்தியுள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள யூரி போரிசோவ், “சர்மட் ஏவுகணைகள் போர் கடமையில் வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
2018 இல் புடின் அறிவித்த பல மேம்பட்ட ஆயுதங்களில் சர்மட்டும் ஒன்றாகும். பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சாத்தான் என அறியப்படுகிறது.
இந்த சர்மட் ஏவுகணைகள் ஒரு குறுகிய ஆரம்ப வெளியீட்டு கட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது ஆக்கிரமிப்பு சொல்லாட்சியின் வெப்பத்தில், நம் நாட்டை அச்சுறுத்த முயற்சிப்பவர்களை இருமுறை சிந்திக்க வைக்கும்” என்று கூறியுள்ளார்.
இதேவேளை ஐரோப்பாவையே ஆட்டங்காணவைக்கும் இந்த சாத்தான் ஏவுகணையை பயன்படுத்தி பிரித்தானியாவை வெறும் 06 நிமிடங்களில் அழிக்க முடியும் என முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.