நாட்டின் தற்போதைய நிலையை ஆதரிக்கவில்லை – பெரமுன செயலாளர்

தமது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்சியிடம் கேட்காமலே அல்லது கட்சியாக நாம் மறுக்கும் விடயங்களை ஜனாதிபதியிடம் தமக்கு தேவையானவற்றை கேட்டு செய்து கொள்கிறார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

வாராந்த ஊடகவியலார் சந்திப்பில் இன்று(04.09) கருத்த தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினர்.

“மக்கள் சலுகைகளை கோரவில்லை. வரிகளை அதிகரிக்க வேண்டும், வரி வசூலிப்பை குறைக்க வேண்டுமெனவும் மக்கள் கோரவில்லை” எனவும் ஜனாதிபதிக்கு கூறுகிறார்கள். அதனை கேட்டு அதன்படி ஜனாதிபதி செயற்படுகிறார் எனவும் கூறிய சாகல காரியவசம், போராட்டங்களில் வீதிகளில் நின்றவர்கள் கோரியது இப்போது கிடைக்கிறது எனவும் தாம் தற்போதைய நிலைமையினை ஆதரிக்கவில்லை எனவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் கட்சியாக புதிய முன்மொழிவு வரைபு ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதனை மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், அதனை மக்கள் விரும்பினால் தமக்கு வாக்களிப்பார்கள் எனவும், இல்லாவிட்டால் தற்போதைய நிலையை மக்கள் விரும்பினால் அதன்படியே செல்ல நாம் விடுவோம் எனவும், கூறியுள்ளார். இது கேஜனநாயக நாடு. மக்கள் விருப்பம் போல நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply