நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை நாட்டின் பலப்பகுதிகளில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினப்புரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு 24 மணி நேரம் நீடிக்கும் வகையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு 01 ஆம் நிலை (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.