மொரோக்கோவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள  தகவலின்படி, சுமார் 1,400 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வட ஆபிரிக்காவின் மொரோக்கோ மாநிலத்தில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது. 

இதில் ஏரளாமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மீட்பு பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாலை கட்டமைப்பு சீர்குலைந்துள்ள நிலையில், மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே உயிரழப்போரின் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

Social Share

Leave a Reply