மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் 1905 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைபாடுகளுக்கு தீர்வு காண கூடுதல் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் முன்வைக்கப்படும் விடயங்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.