ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (10.09) காலை ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்காரணமாக ரயில் சேவைகள் தடைபடலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.