பாகிஸ்தானுக்கெதிராக இந்தியா விஸ்வரூபம்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 போட்டியில் இந்தியா அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 357 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை துரதியடிக்க முயற்சித்த பாகிஸ்தான் ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இந்தியா அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நேற்று(10.09) ஆரம்பித்த போட்டி மழை காரணமாக இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் அணி துடுப்பாட ஆரம்பித்த வேளையில் முதல் 10 ஓவர்களையும் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் மிக அபாரமாக வீசினார்கள். இறுக்கமாக அமைந்த பந்துவீசு பாகிஸ்தான் வீரர்களை அச்சுறுத்துவதாக அமைந்தது. இந்த 10 ஓவர்களில் 1 விக்கெட் வீழ்த்தப்பட்து. 43 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றது. ஹார்டிக் பாண்ட்யா அழைக்கப்பட்டு முதல் ஓவரிலேயே பாபர் அஷாமின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஓவர் நிறைவடைய மழை வந்தது. மீண்டும் போட்டி ஆரம்பித்ததும் பாகிஸ்தான் அணியின் மூன்றாவது விக்கெட் ஆக மொஹமட் ரிஸ்வானின் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

இந்தியா அணியின் பந்துவீச்சு அபாரமாக அமைய தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி தடுமாறியது. பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.

இந்தியா அணியின் பந்துவீச்சளர்கள் அனைவருமே சிறப்பாக பந்துவீசியுள்ளனர். குல்தீப் யாதவ் கூடுதல் விக்கெட்களை கைப்பற்றி அவர் அணியில் தெரிவு செய்யப்பட்டமை சரியென நிரூபித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராப் சுப்பர் 04 தொடரில் பந்துவீச மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 5.10 மணிக்கு மழை ஆரம்பித்தது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்தமையினால் போட்டி நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளான இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. பிரேமதாச மைதானத்தில் இது வழமைக்கு மாறான முடிவு. இந்திய அணி முதலில் துடுப்பாட விரும்பியதாக ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார்.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆரம்பம் ஒன்றை வழங்கினர். ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகிய இருவரும் 121 ஓட்டங்களை பகிர்ந்து அரைச்சதங்களையும் பூர்த்தி செய்தனர். ஷதாப் கான் மோசமாக அடிவாங்கிய போதும் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். ரோஹித் ஆட்டமிழந்து 7 பந்துகளில் கில் ஆட்டமிழந்தார். அதன் பின் விராத் கோலி, லோகேஷ் ராகுல் நிதானமான இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி இன்னிங்ஸை கட்டியெழுப்பினர். 24.1 ஓவர்களில் 02 விக்கெட்டினை இழந்து 147 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று போட்டி ஆரம்பித்தது.

விராத் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகிய இருவரும் நிதானமாக இணைப்பாடத்தை கட்டி எழுப்பினார்கள். வேகம் குறைந்து காணப்பட்ட போதும் அரைச்சத இனிப்பாட்டத்தை நெருங்கும் போது வேகத்தை ஆரம்பித்தனர். குறிப்பாக உபாதையிலிருந்து மீண்ட லோகேஷ் ராகுல் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக துடுப்பாடியவர், பின்னர் வேகமாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தார். தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்து அபாரமான மீள் வருகையினை பதிவு செய்துள்ளார். இந்த மீள் வருகை இந்திய அணியின் நான்காமிட சிக்கலை தீர்த்துள்ளது என நம்பலாம். ராகுல் 3000 ஓட்டங்களையும் கடந்தார்.

மறுபுறத்தில் விராத் கோலி சிறந்த துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டார். அவர் பக்கமாகவும் ஓட்டங்கள் அதிகரித்தன. சத இணைப்பாட்டத்தை வேகமாக இருவரும் கடந்தனர். 143 பந்துகளில் 150 ஓட்ட இணைப்பாட்டத்தை கடந்தனர். விராத் கோலி அரைச்சதத்தின் பின்னர் அதிரடி நிகழ்த்தி வேகமாக சதத்தையும் கடந்தார். இருவரும் 233 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

விராத் கோலி 47 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததோடு 13,000 ஓட்டங்களையும் கடந்தார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரராக கோலி தனது பெயரை பதிவு செய்தார்.

32.5 ஓவர்களில் இந்தியா அணி 200 ஓட்டங்களை தொட்டது. 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பூர்த்தி செய்தது இந்தியா அணி. 50 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்கள் இழப்பிற்கு 356 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸை நிறைவு செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்க தவறினாலும் துடுப்பாட்ட வீரர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதுவும் தவறிப்போனது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியினை சந்தித்துள்ளமை இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஓட்ட நிகர சராசரி வேகம் தேவைப்படின் வாய்ப்புகள் உருவாகலாம். எப்படி இருப்பினும் மீதமுள்ள இரு போட்டிகளிலும் ஒரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும்.

அணி விபரம்

ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்

பாபர் அசாம் (தலைவர்), முகமட் ரிஸ்வான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், இப்திகார் அகமட், அகா சல்மான், ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா, பஹீம் அஷ்ரப்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஃபகார் ஷமான்Bowledகுல்தீப் யாதவ்275020
இமாம் உல் ஹக்பிடி – சுப்மன் கில்ஜஸ்பிரிட் பும்ரா091810
பாபர் அசாம்ஹார்டிக் பாண்ட்யா102420
முகமட் ரிஸ்வான்பிடி – லோகேஷ் ராகுல்  ஷர்ட்டூல் தாகூர்020500
அகா சல்மான்L.B.Wகுல்தீப் யாதவ்233220
இப்திகார் அகமட்பிடி – குல்தீப் யாதவ்குல்தீப் யாதவ்233220
ஷதாப் கான்ஷர்ட்டூல் தாகூர்குல்தீப் யாதவ்061000
பஹீம் அஷ்ரப்Bowledகுல்தீப் யாதவ்041200
ஷகீன் ஷா அப்ரிடி   07 06
நசீம் ஷாRetired Out     
ஹரிஸ் ரவுஃப்Retired Out     
உதிரிகள்  04   
ஓவர்  32விக்கெட்  10மொத்தம்128   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா05011801
மொஹமட் ஷிராஜ்05002300
ஹார்டிக் பாண்ட்யா05001701
ஷர்ட்டூல் தாகூர்04001601
குல்தீப் யாதவ்8002505
ரவீந்தர் ஜடேஜா05002600
     

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோகித் சர்மாபிடி – பஹீம் அஷ்ரப் ஷதாப் கான்564964
சுப்மன் கில்பிடி – அகா சல்மான்ஷகீன் ஷா அப்ரிடி5852100
விராட் கோலி  1229493
லோகேஷ் ராகுல்  111106122
இஷன் கிஷன்      
ஹார்டிக் பாண்ட்யா      
ரவீந்தர் ஜடேஜா      
ஷர்ட்டூல் தாகூர்      
குல்தீப் யாதவ்      
ஜஸ்பிரிட் பும்ரா      
மொஹமட் ஷிராஜ்      
உதிரிகள்  09   
ஓவர்  50விக்கெட்  02மொத்தம்356   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷகீன் ஷா அப்ரிடி10007901
நசீம் ஷா9.2015300
பஹீம் அஷ்ரப் 10007400
ஹரிஸ் ரவுஃப்05002700
ஷதாப் கான்10017101
இப்திகார் அகமட்5.4005200

Social Share

Leave a Reply